தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்! - delhi Air Quality

டெல்லி: காற்றின் தரக் குறியீடு 128 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக காற்று தர மதிப்பீட்டாயம் (SAFAR) தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!
டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

By

Published : May 26, 2020, 7:38 PM IST

காற்று தர மதிப்பீட்டாயம் (SAFAR) டெல்லியில் காற்று மாசு குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் தர குறியீட்டை வெளியிட்டது. இதன்படி, நேற்று (மே 25) காற்றிலுள்ள பிஎம் 10 மாசுப் பொருள்களின் அளவு 141ஆக உள்ளது. காற்றிலுள்ள பிஎம் 2.5 மாசுப் பொருள்களின் அளவு 54ஆக உள்ளது.

அதேபோல, இன்று காற்றிலுள்ள பிஎம் 10 மாசுப் பொருள்களின் அளவு 243ஆக உள்ளது. காற்றிலுள்ள பிஎம் 2.5 மாசுப் பொருள்களின் அளவு 93ஆக உள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருகிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டம் இல்லாமல் 5ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்தார் பினராயி

ABOUT THE AUTHOR

...view details