தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி காற்று மாசு: 'மிக மோசம்' to 'மிக மிக மோசம்'! - டெல்லி தற்போதைய செய்தி

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் 'மிக மோசம்' என்ற நிலையில் இருந்து 'மிக மிக மோசம்' என்ற நிலைக்குச் சென்றுள்ளது.

Delhi's air quality
Delhi's air quality

By

Published : Oct 31, 2020, 1:08 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் மேம்பட்டிருந்த காற்று மாசு கடந்த சில வாரங்களாகவே மீண்டும் மோசமான நிலைக்குத் திரும்பியுள்ளது. இதன் காரணமாக குழந்தைகளும், வயதானவர்களுக்கும் மூச்சுவிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, டெல்லியில் காற்றின் தரம் 369ஆக இருந்தது. முன்னதாக, காற்றின் தரம் வெள்ளிக்கிழமை 374ஆகவும் வியாழக்கிழமை 395ஆகவும் இருந்தது. குறிப்பாக, டெல்லியுள்ள ஜஹாங்கிர்புரி, முண்ட்கா, ஆனந்த் விஹார் ஆகிய பகுதிகளில் காற்று மாசு 400க்கும் மேல் அதிகரித்துள்ளது.

காற்றின் தரம் 0 முதல் 50க்குள் இருந்தால் காற்றின் தரம் 'நன்றாக' உள்ளது என்று பொருள், அதேபோல காற்றின் தரம் 51 முதல் 100 வரை இருந்தால் 'திருப்தி' என்றும் 101 முதல் 200 வரை இருந்தால் 'மிதமானது' என்றும் அர்த்தம்.

அதேநேரம் காற்றின் தரம் 201 முதல் 300 இருந்தால் 'மோசம்' என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் 'மிகவும் மோசம்' என்றும் பொருளாகும். 401 முதல் 500 வரை காற்றின் தரம் இருந்தால் அது மிக மிக மோசமான நிலையாக கருதப்படுகிறது.

டெல்லியில் வரும் சில நாள்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் காற்று மாசு குறையும் என்று அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களிலுள்ள விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதே தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு ஏற்படுவதற்கான காரணம் என்று டெல்லி அரசு குற்றஞ்சாட்டியது. ஆனால், விவசாய கழிவுகளை எரிப்பது காற்று மாசை அதிகரித்துள்ளது உண்மைதான் என்றாலும் அது மட்டும் காற்று மாசிற்கு முக்கிய காரணம் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 81 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details