தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாசடைந்துவரும் டெல்லி: கெஜ்ரிவால் அரசின் செயல்பாடுகள் கைகொடுக்குமா?

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் பெருகிவருவதால் நுரையீரல் தொடர்பான நோய்கள் விரைவில் தொற்றிக்கொள்ளும் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் இருந்துவருகின்றனர்.

delhi air pollution

By

Published : Oct 18, 2019, 9:49 PM IST

வேளாண் கழிவுகள், புகை, தூசி, ரப்பர் கழிவுகள் எரிப்பால் காற்றின் தரம் மிக மோசமடைந்திருப்பதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவு என்றாலும் கடும் குளிர் என்றாலும் மோசமான வெப்பம் என்றாலும் டெல்லிக்கு அதில் தனி இடம் உண்டு. கடந்த சில ஆண்டாகவே காற்று மாசுபாட்டினால் டெல்லி நகர மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகவே கடந்த ஆண்டுகூட டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளை வெடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. ஆரம்பத்தில் அதற்கு சில எதிர்ப்புகளும் எழுந்தன. வருங்கால தலைமுறையைப் பாதுகாக்க வேண்டி இந்தத் தடைகளை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் எனச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details