இரண்டு மாதத்திற்கு முன், 26 வயதேயான இளம்பெண் தாவிந்தர் கவுர், தன் தந்தையின் பெயரிலுள்ள 50 லட்சம் மதிப்புள்ள சொத்துகளைச் சட்டவிரோதமாக விற்க முற்பட்டுள்ளார். தகவலறிந்து அதிர்ச்சியில் உறைந்த தந்தை, காவல்துறையிடம் சென்று வழக்குப் பதிவு செய்தார்.
தந்தையைக் கொன்று ஏரியில் வீசிய பெண்! அதிர்ச்சித் தகவல் - new delhi
டெல்லி: பணத்திற்காக, தன் தந்தையைக் காதலனுடன் சேர்ந்து கொன்ற இளம் பெண்ணைக் காவல்துறை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் தன் தந்தையைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி, தன் திருமண வெளி உறவான பிரின்ஸ் திக்ஷித்யை (29) தன்னுடன் சேர்த்துக் கொண்டாள். கொலை திட்டத்தை நிறைவேற்ற இரவு தந்தைக்கு தேநீருடன் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். பின் காதலன் இணைந்து கை, கால்களைக் கட்டி பெட்டிக்குள் அடைத்து ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர் தந்தையைக் காணவில்லை என்று காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
மார்ச் 8 ஆம் தேதி ஆற்றில் ஒரு பெட்டி மிதப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, பெட்டியைக் கைப்பற்றியபோது காணாமல் போன அப்பெண்ணின் தந்தை உடல் என்பது தெரியவந்தது.
சந்தேகமடைந்த காவல்துறையினர் தாவிந்தர் கவுரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான பேசியதால் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் தன் தந்தையைக் கொலை செய்ததை ஒப்புகொண்ட தாவிந்தரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் காதலன் பிரின்ஸ் திக்ஷித்யை தேடி வருகின்றனர்.