உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விகாஸ் சிங். இவர் டெல்லியில் வேலைவாய்ப்பு மையம் ஒன்றினை நடத்திவருகிறார்.
விகாஸ் சிங், கடந்த சில தினங்களுக்கு முன் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பல கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
இதில் விகாஸ் சிங்கை முதல் மனைவி ராஜானி கூலிப் படையை ஏவி கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், “தனக்கும் விகாஸ் சிங்கிற்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், 2017-2020ஆம் ஆண்டிற்குள் விகாஸ் சிங் மேலும் மூன்று பேரை திருமணம் செய்துகொண்டார்.
அவருடைய சொத்துகள் அனைத்தும் அந்த மூன்று மனைவிகளுக்கு கொடுத்துவிட்டு தன்னை விவாகரத்து செய்துவிட்டால் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.
எனவே, சுதீர் சிங் என்பவரிடம் ஆறு லட்ச ரூபாய் கொடுத்து தனது கணவரை கொல்லுமாறு கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தக் கொலைக்கு உதவிய சுதீர் சிங், ரோகித் சிங் ஆகிய இருவரை கைதுசெய்தனர்.
தலைமறைவாகவுள்ள மேலும் இளைஞர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: புல்வாமாவில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை!