டெல்லி: டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ராகுல் என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். திருமணத்திற்கு சில தினங்கள் முன்பு தனது காதலரின் உண்மையான பெயர் ஷகிப் அலி என்பதும், அவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் அப்பெண்ணுக்குத் தெரியவந்ததது.
இதனையறிந்த அந்நபர் தன்னை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவேன் என, காதலியை மிரட்டியதையடுத்து, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. சில நாள்களுக்குப் பின்பு, தனது மனைவியை வற்புறுத்தி இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் அடையச் செய்தார். தொடர்ந்து மனைவியின் பெயரையும் இஸ்லாமியப் பெயராக மாற்றினார்.