தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்புகள் குறித்து தினமும் மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் நேற்று வெளியான அறிவிப்பில், ”இதுவரை 87 ஆயிரத்து 692 பேர் குணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது தற்போது கரோனாவுக்கு சிகிக்சை எடுத்துக்கொண்டிருக்கும் 19 ஆயிரத்து 895 என்ற எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாகும். புதிதாக ஆயிரத்து 781 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 921ஆக உள்ளது.
நேற்று (ஜூலை 11) ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்த உயிரிழப்பு 3 ஆயிரத்து 334ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 998 பேர் குணமடைந்துள்ளனர். இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா தொற்றிலிருந்து மீண்டுவரும் பாதையில் டெல்லி சென்றுகொண்டிருக்கிறது. மொத்த கரோனா வைரஸ் பாதிப்பில் தற்போது 20 விழுக்காடு நோயாளிகள் மட்டுமே சிகிச்சை எடுத்துவருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.