வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதில், சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
வன்முறையால் பலர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த 27 வயது குல்ஷன் என்பவர் தனது தந்தையைத் தேடி பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இறுதியாக, மருத்துவமனை ஒன்றின் பிணவறைக்கு சென்று தனது தந்தை குறித்து விசாரித்துள்ளார்.
வன்முறையில் அவரின் தந்தையை சுட்டுக்கொன்று எரித்துவிட்டதாகவும் அதனை தாங்கள் கண்டதாகவும் சிலர் குல்ஷனிடம் தெரிவித்துள்ளனர். தந்தையின் கால் பகுதியை மட்டும் மீட்டு காவல் துறையினர் மருத்துவமனையில் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இறந்தவர் தனது தந்தை என நிரூபிக்க மருத்துவர்கள் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளவுள்ளதாக குல்ஷன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் சிக்கி என் கணவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால், பொருளாதார ரீதியாக எங்கள் தந்தையையே சார்ந்து இருந்தோம்" என்றார்.
இதையும் படிங்க: விசாரணையை எதிர்கொள்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு