குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டம், திங்கள்கிழமை முதல் கலவரமாக வெடித்தது. குறிப்பாக, தலைநகரின் வடகிழக்கு டெல்லியில் வெடித்துள்ள இக்கலவரம் தொடர்பான சம்பவங்களில் ஒரு காவல்துறை அலுவலர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி கலவரம் - உளவுப்பிரிவு அலுவலரின் உடல் கண்டெடுப்பு - டெல்லி கலவரம் லேடஸ்ட் செய்திகள்
டெல்லி : சந்த் பாக் பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் வடிகாலில் இருந்து காவல்துறை உளவுப் பிரிவைச் சேர்ந்த அலுவலர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
IB officer dead
இந்தப் பரபரப்பான சூழலில், டெல்லி சந்த் பாக் பகுதியில் உள்ள ஒரு கழிவுநீர் வடிகாலிலிருந்து இறந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த உடல் காவல்துறை உளவுப் பிரிவு அலுவலர் அன்கித் ஷர்மாவுடையது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : 'டெல்லி போலீஸ் குற்றவாளிகளைப் பிடித்திருந்தால் கலவரத்தைத் தடுத்திருக்கலாம்' - உச்ச நீதிமன்றம் விமர்சனம்