டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும அது பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது. வன்முறை காரணமாக பல இடங்களில் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் உருவாகியது. இதையடுத்து, அவர்களுக்காக மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் செயலர் அனுராக் திருப்பதி, "வன்முறை காரணமாக பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களின் விவரங்களைப் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்ப பள்ளி முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் புதிய தேர்வுகள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.