கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆர். எஸ். எஸ். அமைப்பின் ஆண்டுக் கூட்டம் மார்ச் 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டத்தில்தான் அமைப்பின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில், டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வன்முறை குறித்த விவகாரங்களை டெல்லி குழு தயார் செய்து சமர்ப்பிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர். எஸ். எஸ். இல்லாத பகுதிகளில் அமைப்பை எப்படி கொண்டு சேர்க்கலாம் என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. ஆர். எஸ். எஸ். அமைப்பின் பயிற்சி கூடத்தை விரிவாக்கம் செய்யவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.