தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி கலவரம் - கார்ட்டூன் மூலம் இதயங்களை வென்ற அமுல்! - சிஏஏ போராட்டம் குறித்து அமுல்

வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரங்கள் குறித்து அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொறுப்புணர்வுடன் கூடிய கார்ட்டூன் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

amul ad on delhi violence
amul ad on delhi violence

By

Published : Feb 29, 2020, 11:02 PM IST

கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

குறிப்பாக, வடகிழக்கு டெல்லியிலுள்ள ஷாகீன் பாக் பகுதியில் மாதக் கணக்கில் அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த வாரம் டெல்லியில் திடீரென்று கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்களால் டெல்லி முழுவதும், பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லி கலவரங்கள் குறித்து பிரபல பால் நிறுவனமான அமுல், கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெரும் அச்சத்துடன் பள்ளி உடையணிந்துள்ள மாணவி ஒருவர் அமர்ந்துள்ளதுபோல் அமுல் நிறுவனம் இந்த கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.

அதில் "அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அமுல்" என்று பதிவிடப்பட்டுள்ளது. இணையவாசிகளை அதிகம் கவர்ந்த இந்த கார்ட்டூன் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: விமானத்தில் ரொமான்ஸ் செய்த ஜோடி புறாக்கள்

ABOUT THE AUTHOR

...view details