போதைப்பொருள் கடத்தல் நாடு முழுவதும் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த ஒருவரை சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, போதைப்பொருளை காப்ஸ்யூலில் அடைத்து அவர் உட்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.