நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினம்: டெல்லியில் பாதுகாப்பு தீவிரம்! - 71ஆவது குடியரசு தினம்
டெல்லி: 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துணை ஆணையர் விக்ரம் போர்வால் கூறுகையில், "மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், டெல்லி காவல்துறையினர் ஆகியோர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார். மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனரே என செய்தியாளர் கேட்டதற்கு, தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மக்கள் ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவதாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: வீதிக்கு வந்த போஸ்டர் சண்டை...!