தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோயம்பேடுக்கு டஃப் கொடுக்கப்போகிறதா டெல்லி ஆசாத்பூர் சந்தை? - ஆசாத்பூர் சந்தை

டெல்லி: டெல்லி ஆசாத்பூர் சந்தையில் தகுந்த இடைவெளியை கொஞ்சம்கூட கடைப்பிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றது கரோனா பரவலுக்கு வித்திட்டுள்ளது.

delhi azadpur market
delhi azadpur market

By

Published : Jun 13, 2020, 8:01 AM IST

டெல்லி ஆசாத்பூர் பகுதியில் காய்காறி, பழங்கள் சந்தை அமைந்துள்ளது. அங்கு நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருள்களை வாங்கிச் சென்றனர்.

மக்கள் ஒருவர் அருகில் ஒருவர் நின்று காய்கறிகளை வாங்கினர், வியாபாரிகளும் அதனைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்ததால் தகுந்த இடைவெளி தகுந்த இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 687 பேர் இருக்கும் நிலையில், அரசு அறிவுறுத்திய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததால் மேலும் தொற்று பரவும் இடர் ஏற்படுத்துள்ளது.

ஆசாத்பூர் சந்தையில் நான்கு வணிகர்கள் உள்பட 15 பேருக்கு கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை கோயம்பேடு சந்தையில் அரசின் அறிவுறுத்தலை மதிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருள்களை வாங்கிச் சென்றதால் கரோனா பரவல் வீரியமாக இருந்தது யாவரும் அறிந்ததே!

அதனால், மக்கள் எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், இந்தத் தருணத்தில் அரசு சொல்லும் அறிவுறுத்தல்களையும், விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தை தொட்ட கரோனா எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details