டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் இரு தரப்பினருக்கிடையேயான கலவரமாக மாறி தலைநகரின் சட்ட ஒழுங்கை இரண்டு நாள்களாக முடக்கிப்போட்டது. இந்தக் கலவரத்தில் காவல் துறையைச் சேர்ந்த நபர் ஒருவரும், உளவுத் துறை அலுவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கலவரம் தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு காவல் துறை, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. அதில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியதாகக் கூறி, ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த தம்பதியினர் கைதுசெய்யப்பட்னர். இவர்கள் போராட்டத்தின் மூலம் கலவரத்தைத் தூண்ட ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து திட்டமிட்டதாகக் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.