குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக, வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதில் 53 பேர் உயிரிழந்தனர். இதில், உளவுத்துறை உயர் அலுவலர் அங்கித் சர்மா என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கலவரத்தை தூண்டியதாகவும் அங்கித் சர்மாவை கொலை செய்ததாகவும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது.
டெல்லி காவல்துறை தாஹிரை கைது செய்த நிலையில், இதுகுறித்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, பிணைக் கோரி தாஹிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி வினோத் யாதவ், "குற்றம் நடைபெற்ற இடத்தில் தாஹிர் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது.
ஒரு குறிப்பிட சமூகத்தின் மீது கலவரத்தை தூண்ட சிலர் ஊக்குவித்துள்ளனர். நேரடியாக அவருக்கு தொடர்பு இல்லை. எனினும், இவரின் தூண்டுதலின் பேரில் சிலர் கொலை செய்துள்ளனர். கலவரத்தின் போது அவர் கவுன்சிலர் பதவி வகித்துவந்துள்ளார்" என்றார்.