குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக, வட கிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதில் 53 பேர் உயிரிழந்தனர். ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா, இந்தக் கலவரத்தை தூண்ட சதி செயலில் ஈடுபட்டதாகக் கூறி சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் (உபா) சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
டெல்லி கலவரம்: தன்ஹாவின் பிணை மனு தள்ளுபடி! - டெல்லி கலவரம்
டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட தன்ஹா பிணை கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி கலவரம்
இந்நிலையில், இவர் பிணை கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், தன்ஹாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், தன்ஹாவின் பிணை மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.