தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகரில் பலத்த பாதுகாப்பு! - குடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடு

டெல்லி: குடியுரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் பகுதியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் டெல்லி காவல் துறையின் இணை ஆணையர் கேட்டுக்கொண்டார்.

Republic Day Security in delhi
Republic Day Security in delhi

By

Published : Jan 24, 2020, 6:58 PM IST

71ஆவது குடியரசு தினத்தை கொண்டாட தேசமே தயாராகிவருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்தியா கேட் அருகே மேற்கொள்ளப்பட்டுள்ள குடியரசு தின பாதுகாப்பு பணிகளை ஆனந்த் மோகன் இன்று மேற்பார்வையிட்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி காவல் துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளை காண வருபவர்கள் தேவையற்ற பொருள்களை எடுத்து வர வேண்டாம். காவல் துறை மேற்கொள்ளும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு பணியில் நாட்டின் பல்வேறு பாதுகாப்பு பிரிவுகளும் ஈடுபட்டுள்ளதால், பல அடுக்கு பாதுகாப்பு முறை டெல்லி நகரில் அமலில் இருக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகளை டெல்லி காவல் துறை ஒரு மாதம் முன்பே தொடங்கிவிட்டது" என்றார்.

இதையும் படிங்க: இந்தியாவில் குட்டி பாகிஸ்தான் உருவாகிறதா? - பாஜக வேட்பாளரின் சர்ச்சை பேச்சு

ABOUT THE AUTHOR

...view details