நாட்டின் தலைநகர் டெல்லியில் 3,390 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 780 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 2,175 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (ஜூன்18) முதல் வாரத்தின் ஏழு நாளில் ஆறு தினங்கள் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.
அந்த வகையில் கடந்த 24ஆம் தேதி டெல்லியில் கரோனா பாதிப்பு மும்பையை தாண்டி 3,788 ஆக பதிவாகியிருந்தது. டெல்லியில் 44 ஆயிரத்து 765 பாதிப்பாளர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதுவரை 26 ஆயிரத்து 586 பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 17 ஆயிரத்து 305 பேருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இதுவரை, 15 ஆயிரத்து 159 பேர் அவரவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரத்திலிருந்து நாளொன்று கரோனா பாதிப்பாளர்கள் விகிதம் ஆறு விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: முதுகு வலியிலிருந்து விடுபட 5 வழிகள்!