டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதற்காக மெட்ரோ சேவைகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டது.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளியே சென்று வாக்களியுங்கள். பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டின் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வது போல் நாட்டின் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
டெல்லியின் பொறுப்பை உங்களின் தோள்களில் ஏற்றி கொள்ளுங்கள். வீட்டில் உள்ள ஆண்களை அழைத்து சென்று தேர்தலில் வாக்களியுங்கள். வாக்கு உங்கள் உரிமை என்பது குறித்து விவாதம் செய்ய தயங்காதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே 70 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையவுள்ளது.