ஆம் ஆத்மி கட்சியின் ஒன்பது பெண் வேட்பாளர்களில் எட்டு பேர் வெற்றி - ஆம் ஆத்மி கட்சி
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக களமிறக்கப்பட்ட ஒன்பது பெண் வேட்பாளர்களில் எட்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. குறிப்பாக அதில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக களமிறக்கப்பட்ட ஒன்பது பெண் வேட்பாளர்களில் எட்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு பக்கபலமாக அமைந்தது. மொத்தமாக ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும் 24 பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியிருந்தன. அவற்றில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 10 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிகபட்சமாக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி, கல்காஜியில் களமிறக்கப்பட்டு 11 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்தாண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புதுவித அரசியலில் ஈடுபட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரை