தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் 62.59% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் - பாஜக

டெல்லி: சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 62.59 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Delhi election
Delhi election

By

Published : Feb 9, 2020, 11:53 PM IST

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடைபெற்றது. தலைநகர் டெல்லியை பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை விழுக்காடு வாக்குகள் பதிவானது என்பது குறித்த தகவல்களை டெல்லி தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 9) மாலை வரை வெளியிடவில்லை.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், "தேர்தல் முடிந்து இவ்வளவு நேரமாகியும் ஏன் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடவில்லை. தேர்தல் ஆணையம் என்னதான் செய்கிறது?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 7.15 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த தேர்தல் துணை ஆணையர் சந்தீப் சக்சேனா, "வாக்குப்பதிவு குறித்த தகவல்களை வெளியிட தேவையற்ற காலதாமதம் ஏற்படவில்லை. நாங்கள் துல்லியமான தகவல்களை வெளியிட விரும்பினோம். நாங்கள் கால தாமதமாகவும் வாக்குப்பதிவு குறித்த தகவல்களை வெளியிடவில்லை. இது அசாதாரண நிகழ்வும் இல்லை" என்றார்.

மேலும், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62.59 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதிகபட்சமாக பல்லிமாரான் தொகுதியில் 71.6 விழுக்காடு வாக்குகளும் டெல்லி கண்டோன்மென்ட் தொகுதியில் 45.4 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் எதிரொலி - சீனாவிற்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details