தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி தேர்தல்: கடைசி நாளில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் - டெல்லி தேர்தலில் காங்கிரஸ்

டெல்லி: நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

By

Published : Jan 21, 2020, 6:48 PM IST

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) கடைசி நாளாகும்.

70 இடங்களைக் கொண்டிருக்கும் டெல்லி சட்டப்பேரவைக்கு ஏற்கனவே 61 வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

இறுதி வேட்பாளர் பட்டியலில் ஐந்து பேர் என மொத்தம் 66 வேட்பாளர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளனர். மீதமுள்ள நான்கு தொகுதிகளில் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் போட்டியிடவுள்ளது.

இதையும் படிங்க: பொருளாதார வல்லுநர்களை விமர்சிக்கும் பாஜக அமைச்சர்கள் - சிதம்பரம் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details