தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சமூக ஆர்வலர் ஷீலா ரஷீத் மீது தேச துரோக வழக்கு! - Delhi Police today filed sedition case on shehla rashid

டெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில், சமூக ஆர்வலர் ஷீலா ரஷீத் மீது டெல்லி காவல் துறை தேச துரோக வழக்கு பதிவுசெய்துள்ளது.

ஷீலா ரஷித்

By

Published : Sep 6, 2019, 7:22 PM IST

காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் ஷீலா ரஷீத். இவர் தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கிறார். சமூக ஆர்வலரான இவர், காஷ்மீர் பிரச்னை உள்ளிட்டவற்றிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இவர், அதுகுறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தார். இதனையடுத்து, இந்திய ராணுவம் குறித்து தவறான தகவல் பரப்பியதாகக் கூறி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

ஷீலா ரஷீத்

அவரின் புகாரை ஏற்ற காவல் நிலையம், சமூக ஆர்வலர் ஷீலா ரஷீத் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தது. மேலும், தேச துரோகம், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் போன்ற பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை காவல் சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details