குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிக்கையை பாட்டியலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ(தேச துரோகம்), 153(ஏ)(பகைமை ஊக்குவித்தல்), 153 (பி)(ஒருமைப்பாடுக்கு குந்தகம் விளைவிப்பது), 505 (வதந்தி பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழும் உபாச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.