தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம்; கூகுள் உதவியை நாடும் போலீஸ்! - கூகுளின் உதவியை நாடும் டெல்லி போலீஸ்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் கூகுளின் உதவியை நாடுகின்றனர்.

delhi-police-to-approach-google-on-jan-26-violence
delhi-police-to-approach-google-on-jan-26-violence

By

Published : Feb 5, 2021, 10:05 PM IST

டூல்கிட் என்பது குறிப்பிட்ட விவகாரத்தின் முழுமையான தகவல்கள் அடங்கிய ஆவணமாகும். குறிப்பிட்ட விவகாரம் குறித்த தகவல்களை கோப்பாக தயாரித்து மக்களின் ஆதரவை கோருவதுடன் அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் அளிக்கிறது. ஒருவர் தயாரிக்கும் டூல்கிட்டை மற்றவர் தனக்கு தெரிந்த தகவல்களுடன் மாற்றி அமைக்கவும் இது வழிசெய்கிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்த டூல்கிட்தான் குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் என டெல்லி காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட அந்த டூல்கிட் எந்த ஐபி அட்ரஸிலிருந்து பகிரப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய டெல்லி காவல்துறை கூகுளின் உதவியை நாடியுள்ளது.

தற்போது, 300க்கும் மேற்பட்ட சமூக வலைதள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. சர்வதேச அளவில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு சமூக பிரிவுகள், மதத்தவர், கலாசாரங்களை கொண்டவர்களுக்கிடையே ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த டூல்கிட் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசுக்கு எதிரான கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு எதிராக சமூக, கலாசார, பொருளாதார போரை தொடுக்கும் வகையில் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காலிஸ்தான் ஆதரவு அமைப்பான போயட்டிக் ஜஸ்டீஸ் பவுன்டேசன், டூல்கிட்டை உருவாக்கியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 'நோ தடுப்பூசி, நோ சம்பளம்' ஊழியர்களை எச்சரித்த ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details