தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை - தலைமைக் காவலர் உயிரிழப்பு!

டெல்லி: குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் தலைமைக் காவலர் கொல்லப்பட்டார்.

144 CrPC imposed at North-east district of Delhi  Delhi Police, CAA  Delhi Police: Section 144 CrPC imposed at ten locations in North-east district of Delhi  சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: தலைமை காவலர் உயிரிழப்பு  குடியுரிமை திருத்தச் சட்டம், டெல்லி, காவலர் உயிரிழப்பு, வன்முறை, கல்வீசி தாக்குதல்,
Delhi Police: Section 144 CrPC imposed at ten locations in North-east district of Delhi

By

Published : Feb 24, 2020, 4:26 PM IST

டெல்லியின் வடகிழக்குப் பகுதியான மஜ்பூரில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடந்துவருகிறது. இப்போராட்டத்தின்போது, திடீரென இன்று வன்முறை வெடித்தது. இரு குழுக்கள் ஒருவொருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.

அப்போது இருத்தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், பாதுகாப்பு பணியிலிருந்தத் தலைமைக் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தார். வன்முறையில் காவல் உயர் அலுவலர் உள்பட மேலும் சில காவலர்களும் காயமடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக டெல்லி வடகிழக்கு டிசிபி வேத பிரகாஷ் சூர்யா கூறினார். இது குறித்த அவர் மேலும் கூறுகையில், “இரு தரப்பினருடன் தொடர்ந்து பேசிவருகிறோம். தற்போது அமைதி திரும்பியுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:பீம் ஆர்மி போராட்டத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஷியா மதகுரு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details