தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படங்கள் வெளியீடு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போரட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்ட 70 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Jamia violence
Jamia violence

By

Published : Jan 29, 2020, 9:26 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ஜாமியா பல்கலைக்கழகம் மற்றும் ஜேஎன்யு-வில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பேருந்துகளும் மற்ற வாகனங்களும் தீக்கிரையானது. டெல்லி காவல் துறையில் பல்வேறு முதல் குற்ற அறிக்கைகள் இதுகுறித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, இந்த வன்முறைச் சம்பவத்துக்கு தொடர்புள்ள 70 பேரின் புகைப்படங்களை டெல்லி காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அஸ்ஸாம் பூர்வகுடிகளுடன் முத்தரப்பு ஒப்பந்தம்!

ABOUT THE AUTHOR

...view details