டெல்லி உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக நிதி முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பாஜக ஊழலில் ஈடுபட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோரின் வீட்டின் வெளியே போராட்டம் நடத்த அனுமதி கோரினர்.
அமித் ஷா வீட்டின் வெளியே போராட்ட முயற்சி... ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் வெளியே போராட்டம் நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களின் வீட்டிற்கு வெளியே போராட்டம் நடத்த சென்ற ராகவ் சாதா, அதிஷி உள்ளிட்டவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி நகராட்சி கவுன்சிலில் 2,457 கோடி ரூபாயை பாஜக மோசடி செய்திருப்பதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர்.
மத்திய டெல்லியில் அமைந்துள்ள வடக்கு டெல்லி நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை தெற்கு டெல்லி நகராட்சி பயன்படுத்தியுள்ளது. செலுத்த வேண்டிய வாடகை தொகையான 2,457 கோடி ரூபாயை வடக்கு டெல்லி நகராட்சி தள்ளுபடி செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.