டெல்லி, ஹரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ்குமார்(50). இவர் விகாஸ்புரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தார். மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன், ஹரி நகரில் உள்ள அரசு காவலர் குடியிருப்பில் 4வது தளத்தில் உள்ள 406வது எண் வீட்டில் வசித்து வந்தார். மகன்களில் ஒருவர் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வருகிறார்.
டெல்லியில் துப்பாக்கியால் சுட்டு தலைமை காவலர் தற்கொலை! - கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை
டெல்லி: தலைமை காவலர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், டெல்லி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு சதிஷ்குமார், காவல் நிலையத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹரிநகர் காவல்துறையினர், சதிஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் கிடந்த கைத்துப்பாக்கி, 4 தோட்டக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உயர் அலுவலர்களின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப சூழ்நிலையா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஹரிநகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.