குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதில் சிக்கி 53 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சிஏஏ போராட்டத்தைத் தூண்டிய தம்பதியர் கைது! - Delhi Police detains couple linked to ISIS
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைத் தூண்டியதாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தம்பதியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தைத் தூண்டியதாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தம்பதியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லி ஜாமியா நகர் பகுதியில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் ஜஹன்ஜேப் சாமி, ஹினா பஷிர் பேக் என்பது விசாரணையில் தெரியவந்தது. நாடு முழுவதும் தற்கொலை தாக்குதல்களை நடத்த இவர்கள் திட்டமிட்டருந்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு நீதிமன்றம் பிணை
TAGGED:
சிஏஏ போராட்டம்