டெல்லியின் ஷகார்பூர் பகுதியில் இன்று அதிகாலை, பணியிலிருந்த காவல் துறையினரை நோக்கி சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த காவல் துறையினர், 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பஞ்சாப்பையும், மூன்று பேர் காஷ்மீரையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர்.
டெல்லியில் துப்பாக்கிச் சூடு... கைதானவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு? - துணை காவல் ஆணையர் பிரமோத் சிங் குஷ்வா,
டெல்லி: துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 நபர்களுக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் கருதுகின்றனர்.
டெல்லி
இதுகுறித்து பேசிய துணை காவல் ஆணையர் (சிறப்பு செல்) பிரமோத் சிங் குஷ்வா, "துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, 5 நபர்களை கைது செய்துள்ளோம். மேலும், அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால், விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க:இடுக்கியில் தோட்டத் தொழிலாளிகள் இருவர் வெட்டிக்கொலை