சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர அமெரிக்கா, கனடா, இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன.
கொரோனா தொற்றால் இதுவரை இந்தியாவில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், "இந்தியாவில் மட்டும் இதுவரை 28 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கேரளாவில் பாதிக்கப்பட்ட மூவர் தற்போது குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீனாவில் இதுவரை 3,000 பேர் உயிரிழந்தனர். இங்கு 9 இந்தியர்களும் 16 வெளிநாட்டவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றை கட்டுப்படுத்த டெல்லி மக்கள் முகமூடிகள் அணிந்து செல்கின்றனர். ஆனால், தொற்றை கட்டுப்படுத்த அது உதவாது" என்றார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ்: ஊழியர்களை ஊதியம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தும் எமிரேட்!