நிஜாமுதீனில் நடைபெற்ற மத மாநாட்டை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மக்களின் குறித்து டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் ஜஃப்ருல் இஸ்லாம் கான், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “ நிஜாமுதீனில் நடைபெற்ற மத மாநாட்டை அடுத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்த அழைத்து செல்லப்பட்ட மக்களின் தனிமைப்படுத்தல் காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி கோவிட் -19 சந்தேக நபர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், இவர்கள் இரண்டு மடங்கு காலம் அதாவது 28 நாள்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதன் மூலமாக, அவர்கள் அனைவரும் தேவையின்றி தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.
பிற தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளவர்கள் பரிசோதனையில் பாதிப்படையாதவர்கள் என அறியப்பட்டால் 14 நாள்களுக்குப் பிறகு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுல்தான்புரி, வஜிராபாத், நரேலா, துவாரகா உள்ளிட்ட டெல்லியின் முக்கிய பகுதிகளில் கோவிட் -19 தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் உணவு, மருத்துவப் பராமரிப்பு வழங்கல் திருப்திகரமாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் முதியவர்கள், நீரிழிவு நோய், இதய பிரச்னைகள் போன்ற உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்களும் அடங்குவர். அவர்களில் இருவர், அண்மையில் சுல்தான்புரி முகாமில் போதிய மருத்துவ வசதி, சரியான நேரத்தில் மருந்துகள், உணவை வழங்கத் தவறியதால் நீரிழிவு நோயாளிகளில் இருவர் இறந்துள்ளனர்.
இது இஸ்லாமியர்களில் நோன்பு மாதமாகும். இந்த முகாம்களில் உள்ள பெரும்பாலான மக்கள் நோன்பில் உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நிலவும் நிலைமைகளின் கீழ், இந்த முகாம்களில் உள்ளவர்கள் கடுமையான வாழ்க்கையை எதிர்கொண்டுள்ளனர். கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கும் மேலாக இந்த மக்களை காவலில் வைத்திருப்பது இஸ்லாமிய சமூகத்தில் தவறான எண்ணத்தை உருவாக்குகிறது. மேலும் இது நீதிமன்ற வழக்குகளுக்கும் வழிவகுக்கும் நிலையை உருவாக்கும்.
இந்த முகாம்களில் 28 நாள்கள் கழித்து, பாதிப்பில்லை என பரிசோதனை முடிவிற்கு வந்த அனைவரையும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது ஊரடங்கு தொடந்தால் டெல்லியில் வேறு எங்காவது அவர்கள் தங்க அனுமதிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
டெல்லி கோவிட்-19 : பாதிப்பற்றவர்களை விடுவிக்க அரசுக்கு சிறுபான்மையினர் ஆணையம் கோரிக்கை!
இதையும் படிங்க : நாடு திரும்பும் கேரள மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுக
ள்