தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து குணமான டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்! - கரோனாவிலிருந்து குணமான சத்யேந்தர் ஜெயின்

டெல்லி: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தற்போது குணமடைந்துள்ளார்.

Delhi Minister Satyendar Jain Recovers From COVID
Delhi Minister Satyendar Jain Recovers From COVID

By

Published : Jun 27, 2020, 12:34 AM IST

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின் (55), கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த ஜூன் 16ஆம் தேதி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை. ஆனால், தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்ததால் மீண்டும் இரண்டாம் முறை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமானதும் மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவருக்கு இன்று கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details