தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பு: சிறையில்  உயிரிழந்த ஆயுள் தண்டனை கைதி

டெல்லி:  மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

delhi-mandoli-jail-reports-first-covid-19-death
delhi-mandoli-jail-reports-first-covid-19-death

By

Published : Jun 22, 2020, 3:05 PM IST

கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கன்வர் சிங் டெல்லி மண்டோலி, மத்திய சிறையில் உள்ள 14ஆம் எண் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி கன்வர் சிங் உயிரிழந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதி சிறையில் உயிரிழந்தது தொடர்பாக பெருநகர நீதிபதி, விசாரணை மேற்கொண்டதாகவும், அதன்பிறகே உயிரிழந்த நபருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் டெல்லி சிறைச்சாலை காவல் தலைவர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். மேலும்,தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர் தங்கியிருந்த வளாகத்தில் இருக்கும் 28 நபர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள திகார், ரோகிணி, மண்டோலி ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 23 பேர் இதுவரை இந்தக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் குணமடைந்துள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் இதுவரை சிறைத்துறை காவலர்கள் 45 பேர், இந்தக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details