தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சரவணபவன் சாம்பாரில் கிடந்த பல்லி - வழக்குப்பதிவு செய்தது போலீஸ்! - சரவணபவன்

டெல்லி: பிரபல உணவகமான சரவண பவனில் பரிமாறப்பட்ட உணவில், பல்லி இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர் அந்த உணவகம் மீது காவல் துறையில் புகாரளித்தார்.

பிரபல உணவகம் மீது வழக்குப்பதிவு!
பிரபல உணவகம் மீது வழக்குப்பதிவு!

By

Published : Aug 3, 2020, 3:40 PM IST

கோவிட்-19 பாதிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சுகாதாரம்தான்; அதிலிருந்து காத்துக் கொள்ள இருக்கும் ஒரு பொன்னான வழி. ஆனால், டெல்லியில் இருக்கும் கொனாட் பிளேஸில் இருக்கும் பிரபல உணவகமான சரவண பவனில் அடிப்படை சுகாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, தனது நண்பர்களுடன் பங்கஜ் அகர்வால் இந்த உணவகத்திற்குச் சென்றுள்ளார். இங்கு தென்னிந்திய உணவு வகையான தோசை, சாம்பார் போன்றவற்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது, கொடுக்கப்பட்ட சாம்பாரில் உயிரிழந்த பல்லியின் உடலைக் கண்டு அதிர்ந்த பங்கஜ், அதனைக் காணொலியாகப் பதிவு செய்தார்.

இது குறித்த காணொலியினை அவர் சமூக ஊடகங்களில் வெளியிடவே, அது வைரலாகியது. இந்தச் சம்பவம் தொடர்பாக உணவகத்தின் சார்பில் பங்கஜிடம் மன்னிப்பு கோரியதுடன், இந்த தவறு மீண்டும் அரங்கேறாது என உறுதி அளித்தனர். ஆனால், உணவகத்தின் கவனக்குறைவுக்கு பாடம் புகட்டும் வகையில், பங்கஜ் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினர் உணவகத்திற்கு விரைந்து சென்று, உணவு மாதிரிகளைச் சோதனைக்காகச் சேகரித்தனர்.

பிரபல உணவகத்தில் அரங்கேறிய அலட்சியம்

மேலும், உணவக ஊழியர்கள் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள் பற்றிய விவரங்களையும் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. உணவு மாதிரிகளின் முடிவுகள் வெளிவந்ததும் உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனிடையே பங்கஜின் புகாரின் கீழ், உணவகத்தின் மீது ஐபிசி மற்றும் ஐபிசி 336இன் பிரிவு 269இன் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள உயர் தர சைவ உணவகத்தில் இப்படியான கவனக் குறைவு நிகழ்ந்தது மக்களிடையேபெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 40 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

ABOUT THE AUTHOR

...view details