டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அங்குச் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ளவுள்ளார்.
கட்டண உயர்வு... ஆடை கட்டுப்பாடுகள்! கொதிக்கும் ஜே.என்.யு மாணவர்கள்! - jnu students protest
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வு, ஆடை கட்டுப்பாடுகள் ஆகியவற்றை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
jnu students protest
இந்நிலையில், அக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்லூரியில் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும், கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ள ஆடைக் கட்டுப்பாடு விதிமுறைகளுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தினை கட்டுப்படுத்த அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்று வருகின்றனர்.