டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைந்துள்ளது. விவசாய பொருட்கள் எரிப்பு, தீபாவளி கொண்டாட்டம் போன்றவற்றால் மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத நிலை கூட சில பகுதிகளில் காணப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சசிதரூர் கருத்து பதிவிட்டுள்ளார்.
நம்ம டெல்லிக்கு என்ன தான் ஆச்சு...? - சசிதரூர் ட்விட் - டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரம்
டெல்லி: நாட்டின் தலைநகர் உடல் நலக்குறைவால் (Delhi is injurious to health) பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் கருத்து பதிவிட்டுள்ளார்.
Delhi is injurious to health says Shashi Tharoor
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், குதுப்மினார் உள்ளிட்ட புகைப்படத்துடன் சிகரெட்டையும் சேர்ந்து டெல்லிக்கு உடல்நலக் குறைவு (Delhi is injurious to health) என்பதை குறிக்கும் ஆங்கில வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். சசிதரூரின் இந்த ட்வீட்டுக்கு பலரும் பதிலளித்துள்ளனர்.மேலும் இது பிரச்னையை அரசியலாக்குகிறது என்றும் சிலர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியில் காற்று மாசு: கட்டட வேலைகளுக்குத் தடை!
Last Updated : Nov 2, 2019, 5:32 PM IST