தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க ப. சிதம்பரத்திற்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி நீதிமன்றம் உத்தரவு

By

Published : Oct 11, 2019, 12:57 PM IST

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்பிணையை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத் துறை மனுவுக்கு பதிலளிக்க ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ப. சிதம்பரத்துடன் கார்த்திக் சிதம்பரத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி முன்பிணை வழங்கியது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details