இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நேற்றிரவு டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கரோனா அறிகுறிகளுடன் ராஜிவ் காந்தி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிக காய்ச்சல், மூச்சு திணறல் ஆகியற்றால் நேற்றிரவு நான் ராஜிவ் காந்தி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளேன்" என்று பதிவிட்டிருந்தார். இன்று அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் பங்கேற்றார். இதனால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.