தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்குத் திரும்பிய சுகாதாரத் துறை அமைச்சர்! - பிளாஸ்மா சிகிச்சை

டெல்லி: கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று பணிக்கு திரும்பியுள்ளார்.

Delhi Health Minister
Delhi Health Minister

By

Published : Jul 20, 2020, 5:20 PM IST

உலகெங்கும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் தற்போது இந்தத் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக டெல்லி உள்ளது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடந்த மாதம் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து மருத்தமனையில் தீவிரக் கண்காணிப்பில் இருந்தார். சிகிச்சையின்போது உடல்நிலை மோசமானாதால், அமைச்சருக்குப் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின், கடந்த மாதம் ஜூன் 26ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். 55 வயதான சத்யேந்தர் ஜெயின் தொடர்ந்து வீட்டில் ஒய்வில் இருந்தார்.

இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பின் அவர் இன்று பணிக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள டெல்லி முதலைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

அவர் எப்போதும் களத்திலேயே செயல்பட்டார். மருத்துவமனைகளுக்குச் சென்று சுகாதாரப் பணியாளர்களையும் நோயாளிகளையும் தொடர்ந்து சந்தித்தார். அதன் மூலம் அவர் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கலாம். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் இன்று மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

சத்யேந்தர் ஜெயின் இல்லாத நேரத்தில், அவரின் சுகாதாரம், உள்துறை, பொதுபணித்துறை உள்ளிட்ட துறைகளை துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கவனித்து வந்தார்.

டெல்லியில் இதுவரை 1,22,793 பேருக்கு கோவிட்-19 உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,628 பேர் உயிரிழந்துள்ளனர். 1,03,134 பேர் சிகிச்சைக்குப் பின் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: "மோடியின் போலியான பிம்பம் அவருக்கு பலம், ஆனால் நாட்டிற்கு..." - தாக்கும் ராகுல்

ABOUT THE AUTHOR

...view details