தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் குவிப்பு! விளக்கம் கேட்கும் நீதிமன்றம் - டெல்லி மருத்துவமனை பிணவற பிரச்னை

தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி சங்கீதா திங்க்ரா செய்கல் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கரோனா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களின் உடலை வரம்புக்கு மீறி பிணவறையில் குவித்து வைத்திருந்தமைக்காக ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இதுகுறித்த தெளிவான அறிக்கையை ஜூன் 2ஆம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.

delhi hospital mortuary issue
delhi hospital mortuary issue

By

Published : May 29, 2020, 10:37 PM IST

டெல்லி: கோவிட்-19 நோயினால் இறந்தவர்களின் உடலை பிணவறையில் வரம்புக்கு மீறி குவித்து வைத்திருந்தது தொடர்பாக, ஜூன் 2ஆம் தேதிக்குள் பதிலளிக்க டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்.என்.ஜெ.பி மருத்துவமனையில் மொத்தமாக 80 சடலங்களை வைப்பதற்கு மட்டுமே வசதி உள்ளது. இப்படியிருக்கையில், 108 சடலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக குவித்து வைத்ததாக புகார்கள் எழுந்தன.

அதற்கு 28 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாகவும், 35 உடல்கள் நாளை (மே 30) அடக்கம் செய்யவுள்ளதாகவும் ஆம் ஆத்மி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள நீதிமன்ற அமர்வு, ஜூன் 2ஆம் தேதிக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details