அதிமுகவின் ராஜ்யசபா எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதியன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ”யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றன. அவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ”சசிகலா மக்களுக்கான உறுப்பினர். திரைக்குப் பின்னால் யாரைச் சந்திக்கிறார் என்பதை மக்கள் அறிய வேண்டும். எனவே, புகைப்படங்களை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், சசிகலா குறிப்பிட்டுள்ள சமூக வலைதளங்களுக்கு நஷ்டஈடாக 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தார். இதில், அதிருப்தியடைந்த சசிகலா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.