கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள் என முன்னணியில் நின்று போராடிவருகின்றனர். ஆனால் அவர்களுக்கும் கடந்த சில நாள்களாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுவருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சி சார்பில் செய்தியாளர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை ஆசாத் மைதானத்தில் ஏப்ரல் 16, 17 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. நேற்று வெளியான மருத்துவ சோதனை முடிவுகளில் 53 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.