இதுதொடர்பாக டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பிறப்பித்துள்ள உத்தரவில்,
சமய மாநாட்டில் கலந்துகொண்ட 4,000 ஆயிரம் பேர் விடுவிப்பு! - தப்லீக் ஜமாத்
டெல்லி: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களை டெல்லி அரசு விடுவித்துள்ளது.
![சமய மாநாட்டில் கலந்துகொண்ட 4,000 ஆயிரம் பேர் விடுவிப்பு! Tablighi members](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7087906-257-7087906-1588771083290.jpg)
"நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக டெல்லியில் சமய மாநாடு நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசு தனிமைப்படுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களை தவிர மற்ற அனைவரையும் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்