இந்தியா-சீனா உறவுகளில் பாதகம் ஏற்பட்ட காரணத்தினால் சீன தயாரிப்புகளை இந்திய அரசு புறக்கணிக்க முடிவு செய்துள்ள நிலையில், டெல்லி அரசு அண்டை நாட்டிலிருந்து மின்சார பேருந்துகளை வாங்கும் திட்டத்தை மாற்றியுள்ளது.
இந்நிலையில் சீனாவிலிருந்து பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பேருந்துகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.
தேசிய தலைநகரின் மின்னணு பேருந்துகள் திட்டம் தாமதமானாலும், டெல்லி அரசு எந்தவொரு வணிக ஒப்பந்தத்திலும் தற்போது ஈடுபடாது. அதேசமயம் மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மாநில போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கஹ்லோட் ஏற்கனவே பல நாடுகளுக்குச் சென்றுள்ளார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது வரை டெல்லியில் டி.டி.சி, கிளஸ்டர் பேருந்துகள் உட்பட மொத்தம் 6,487 பேருந்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.