தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவுக்கான சிறப்பு செயலியை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்

டெல்லி: கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் 'டெல்லி கரோனா' என்ற புதிய செயலியை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

delhi-government-launches-app-for-coronavirus-patients
delhi-government-launches-app-for-coronavirus-patients

By

Published : Jun 2, 2020, 5:04 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், 'டெல்லி கரோனா' என்ற புதிய செயலியை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கரோனாவுக்கான சிறப்பு செயலியை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த செயலியின் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன என்ற தகவலை எளிதாக அறிய முடியும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக சிகிச்சை பெற முடியும். இதனுடன் 1031 என்ற இலவச உதவி எண்ணையும் அழைத்து தகவல்களை தெரிந்துகொள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ''மருத்துவ உதவிகளும், படுக்கைகளும் போதுமான அளவிற்கு இல்லையென்று சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன என்பதை மக்கள் அறிவதற்கு ஏதுவாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 41 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் எழக்கூடாது என்பதற்காகவே இந்த செயலி முன்னெச்சரிக்கையாக தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் இந்த சூழலை எதிர்கொள்ள டெல்லி அரசு தயாராகவே உள்ளது. மருத்துவ உதவிகள் பற்றி மக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. அதற்கு அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details