தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்! - மூடப்படும் தலைநகரின் எல்லைகள்

டெல்லி: வைரஸ் பரவலைத் தடுக்க டெல்லி - காசியாபாத் எல்லைகள் மூடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Delhi-Ghaziabad
Delhi-Ghaziabad

By

Published : Apr 22, 2020, 12:43 PM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி-காசியாபாத் எல்லைகள் மூடப்பட்டு அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து காசியாபாத்திற்கு வந்த ஆறு பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் சட்டம் 2005இன் கீழ் இந்த உத்தரவை காசியாபாத் மாவட்ட தலைமை நீதிபதி அஜய் சங்கர் பாண்டே ஏப்ரல் 2ஆம் தேதி பிறப்பித்தார். அதன்படி டெல்லி-காசியாபாத் எல்லைகள் தற்போது தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

அத்தியாவசிய தேவைகளுக்கு இயக்கப்படும் வாகனங்களும் சுகாதாரப் பணியாளர்கள், செய்தியாளர்கள் உள்பட அரசின் பாஸ் வைத்திருப்பவர்களும் மட்டுமே எல்லைகளைக் கடக்க அனுமதியளிக்கப்படுகிறது.

மேலும், அரசு வழங்கியுள்ள பாஸ்களை பொதுமக்கள் முறையாகப் புதுப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு விதிகளை மீறி கர்நாடகாவில் தேரோட்டம்

ABOUT THE AUTHOR

...view details